கோவை: தெருவோரக் கடை உணவுத் திருவிழா!

59பார்த்தது
கோவை நீலாம்பூரில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தெருவோர கடை என்ற தலைப்பில் 80’ஸ் மற்றும் 90’ஸ் காலகட்டத்து உணவுப் பழக்கங்களை நினைவூட்டும் சிறப்பு உணவுத் திருவிழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில், அக்காலத்தில் கிராமப்புற மற்றும் நகரங்களில் மக்கள் விரும்பி உண்ட உணவுகள், மிட்டாய்கள், தேநீர் வகைகள் மற்றும் அந்தச் சூழலுக்கு ஏற்ற தள்ளுவண்டி கடைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும், 80-90 காலகட்டங்களில் பயன்படுத்தப்பட்ட பழைய மாடல் கார்கள் மற்றும் முன்னாள் முதல்வர் ராஜாஜி பயன்படுத்திய கார் ஆகியவை பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.
ரூட்ஸ் குரூப் ஆஃப் கம்பெனியின் இணை நிர்வாக இயக்குனர் சந்திரசேகர், கோகுலம் பார்க் ஹோட்டல் மேலாளர் சீனிவாசன் மற்றும் தலைமை சமையல் கலைஞர் அருள்செல்வன் ஆகியோர் இணைந்து ரிப்பன் வெட்டி இந்த உணவுத் திருவிழாவைத் துவக்கி வைத்தனர்.
விழாவில் பேசிய சந்திரசேகர், 80, 90-களில் மக்கள் ரசித்த உணவுகளை இன்றைய நட்சத்திர ஹோட்டல் தரத்தில் வழங்குவது ஒரு புதுமையான முயற்சி. பழையவை மறையாமல், அந்த காலத்தின் சுவைகளை மீண்டும் நினைவுபடுத்துவதே இந்த விழாவின் முக்கிய நோக்கம், என்று கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி