கோவை: 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம்!

81பார்த்தது
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், ஊதிய முரண்பாட்டை களைதல், காலி பணியிடங்களை நிரப்புதல், காலம் வரை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்டத்தில் சூலூர் தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 150கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினர். இது குறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற தவறினால் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மாற்றத்தை உருவாக்கும் நிலை ஏற்படும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக கடந்த 15 ஆண்டுகளாக பல குழுக்களை அமைத்து ஏமாற்றி வருகிறார்கள். திமுக அரசு தங்களது தேர்தல் வாக்குறுதியில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. திமுகவின் தேர்தல் வாக்குறுதியைத்தான் நிறைவேற்றும் படி கேட்கிறோம். பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று சொல்லாத 6 மாநிலங்களில் கூட இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டது. அரசு ஊழியர்களுக்கான அரசு என்று சொல்லும் திமுக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்துடன் 10 அம்ச கோரிக்கைகளையும் நிறைவேற்ற தர வேண்டும் என்று கூறினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி