கோவை: அரச மருத்துவமனையில் 500 நாட்களைக் கடந்த அன்னதான சேவை

54பார்த்தது
கோவை மாவட்டம், சூலூர் அரசு மருத்துவமனையில் தன்னார்வு அன்னதானக் குழு என்ற அமைப்பின் மூலம் கடந்த 500 நாட்களாக நோயாளிகளுக்கும், வெளியூரிலிருந்து வரும் அவர்களது குடும்பத்தினருக்கும் மூன்று வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த தன்னார்வத் தொண்டு சேவை அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 500-வது நாளான நேற்று பொதுமக்கள் மற்றும் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், திமுக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இந்த சேவையில் ஈடுபட்டு வரும் தர்மராஜ் தலைமையிலான அன்னதானக் குழுவை பாராட்டினர். 

பொதுமக்களில் ஒருவரான விஜயகுமார் பேசுகையில், இந்த அன்னதானக் குழுவினரின் சேவை உண்மையிலேயே பாராட்டத்தக்கது. 500 நாட்களாகத் தொடர்ந்து இப்படி ஒரு சேவை செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. இவர்களைப் போல் மற்றவர்களும் உதவ முன்வர வேண்டும். இந்த குழுவினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தும் இவர்களின் சேவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது எனத் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி