அண்மையில் நடைபெற்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தில் தமிழகத்திற்கு எந்த திட்டங்களும், எந்த நிதியும் ஒதுக்கவில்லை எனக்கூறி பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு தந்தை பெரியார் திராவிட கழகம் மற்றும் அனைத்து அரசியல் மற்றும் சமூக இயக்கங்கள் சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் இராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணிப்பு செய்ததை சுட்டிக்காட்டும் வகையில் நாமம் போட்ட பதாகைகள் ஏந்திய வாரும், காதில் பூவை சுற்றி கொண்டும் நூதன முறையில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது, மேலும் தமிழ்நாட்டுக்கு கோவிந்தா, பாஜகவுக்கு கோவிந்தா, தமிழ்நாடு திட்டங்களுக்கு கோவிந்தா என்ற கோஷங்களும் எழுப்பினர். இந்த கூட்டத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.