கலப்பட மது தயாரித்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

2613பார்த்தது
கலப்பட மது தயாரித்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
கோவை மாவட்டம் காரமடை பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக கலப்பட மதுபானம் தயார் செய்து விற்பனைக்கு வைத்திருந்த‌ கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ்(40), மணிகண்டா (27) ஆகியோரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி மேற்கண்ட நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து பிரகாஷ் மற்றும் மணிகண்டாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி