மனநலனை பேணுவதன் அவசியம் குறித்து இன்று (அக்.10) உலக மனநல தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள் “பணியிடத்தில் மனநலத்திக்கு முதலிடம் கொடுப்போம்” என்பது தான். இதன் பொருள் ஆரோக்கியமான பணியாளர்கள் கூட, மோசமான பணிச் சூழலில் வேலை செய்யும் பொழுது அவர்கள் உடல் மற்றும் மனம் பாதிப்படைய கூடும். எனவே பணியாளர்கள் முதலில் மனநலத்தில் கவனம் செலுத்த வேண்டும். மனநலம் மேம்பாடும் பொழுது, பணிக்கு வராமல் இருப்பது குறைந்து, வேலையில் ஈடுபாடும் அதிகமாகும்.