கோவை: மர்ம நபர்களால் கழுத்தை அறுத்துக் கொலை; பரபரப்பு
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள வாகராயம்பாளையத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் இளங்கோ (45), மர்ம நபர்களால் கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் நேற்று சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொல்லப்பட்ட இளங்கோ மீது ஏற்கனவே திமிங்கல உமிழ்நீர் வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரு சம்பவங்களுக்கு இடையே தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.