நடிகைகளே பொறாமைப்படும் அளவுக்கு தனது கண்களாலும் கவர்ச்சியாலும் திரையுலகில் தடம் பதித்த நடிகை சில்க் ஸ்மிதாவின் 64வது பிறந்தநாள் இன்று. (நவ. 02), சினிமாவில் ஒப்பற்ற கனவுக்கன்னியாக வலம் வந்த சில்க் ஸ்மிதாவின் நிஜ வாழ்க்கையில் துன்பங்களும், ஏமாற்றங்களும் மட்டுமே அதிகம் இருந்தது. இவர் செப். 23, 1996-ல் தனது வீட்டில் தூக்கிட்டு இறந்து போனார். அவருக்கான இடம் மட்டும் சினிமாவில் இப்போதும் வெற்றிடம் தான்.