சரக்கு விமான போக்குவரத்து சேவை மீண்டும் வருகின்ற ஜூலை 16

82பார்த்தது
கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு , நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு சரக்கு விமான போக்குவரத்து சேவை மீண்டும் வருகின்ற ஜூலை 16 முதல் செயல்படும் என கோவை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்

கோவை விமான நிலையத்திலிருந்து, பிற மாநிலங்களுக்கான உள்நாட்டு சரக்கு போக்குவரத்து சேவையானது கடந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக மத்திய விமான பாதுகாப்பு கழகத்தின் விதிமுறைகளை பின்பற்றுவதற்கான தேவையான பரிசோதனை சாதனங்கள் இங்கு இல்லாமல் இருந்தது. இந்த பரிசோதனை சாதனங்கள் இல்லாததால் கோவை உள்ளிட்ட சில விமான நிலையங்களில் உள்நாட்டு சரக்கு விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதனால் வர்த்தகங்கள் தங்கள் பொருட்களை உடனுக்குடன் அனுப்ப முடியாமல் இழப்பை சந்திக்க வேண்டியதாக இருந்தது. இது குறித்து பல வர்த்தக அமைப்புகள் மற்றும் விமான போக்குவரத்து நிறுவனங்கள் விமான நிலைய ஆணையத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தநிலையில் தற்போது தேவையான பரிசோதனை கருவிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் கோவை விமான நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் முறையான அனுமதி பெற்று தற்போது கோவை விமான நிலையத்திலிருந்து பிற நகரங்களுக்கு 100 சதவீதம் சான்று பெற்று சரக்குகளை அனுப்ப முடியும் என்றும் இந்த சேவை வருகின்ற ஜூலை 16 தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர

தொடர்புடைய செய்தி