தவெக கொடியில் யானை - பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு

77பார்த்தது
நடிகர் விஜய்யின் கட்சிக் கொடியில் யானை சின்னம் இடம்பெற்றதற்கு பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிஎஸ்பி மாநில தலைவர் ஆனந்தன் வெளியிட்டுள்ள வீடியோவில், "அசாம், சிக்கிம் தவிர பிற மாநிலங்களில் எந்த கட்சியும் யானை சின்னத்தை எந்த வடிவத்திலும் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணைய உத்தரவு உள்ளது. தவெக கொடியில் யானையின் உருவம் உள்ளதால், அக்கட்சி தலைமைக்கு தேர்தல் ஆணைய உத்தரவு குறித்த சட்ட நகல்களை அனுப்பியுள்ளோம். அவர்கள் பரிசீலித்து முடிவெடுப்பதாக கூறியுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி