மறைந்த நடிகர் மோகன் நடராஜன் உடலுக்கு சூர்யா அஞ்சலி

50பார்த்தது
மறைந்த நடிகர் மோகன் நடராஜன் உடலுக்கு சூர்யா அஞ்சலி
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்த மோகன் நடராஜன் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (செப்., 03) சென்னையில் காலமானார், அவருக்கு வயது 71. கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றி மருத்துவ சிகிச்சையில் இருந்த நிலையில் உயிரிழந்தார். மோகன் மறைவு செய்தி கேட்டு அவர் வீட்டிற்கு நேரில் சென்ற நடிகர் சூர்யா உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் மோகன் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

தொடர்புடைய செய்தி