பொள்ளாச்சி அரசு மருத்துவமனை பாலக்காடு சாலையில் அமைந்துள்ளது. இங்கு தினம் தோறும் உள்நோயாளிகள், புற நோயாளிகள் என பல்வேறு தரப்பினர் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகின்றனர். பொள்ளாச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் முறையாக அகற்றப்படாமல் நீண்ட நாட்கள் குப்பைகள் கட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதனால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இங்கு பணிபுரியும் பணியாளர்கள் முதல் நோயாளிகள் வரை அனைவரும் சிரமப்படுகின்றனர். குப்பையை உடனடியாக அகற்ற வேண்டும் வேண்டும் என நோயாளி ராமச்சந்திரன் நகராட்சிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.