கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ரூ. 1. 29 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறப்பு பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பு பிரிவுடன் கூடிய கட்டடம் மற்றும் உபகரணங்கள். ரூ. 50 இலட்சம் மதிப்பீட்டில் காரமடை வட்டார பொது சுகாதார அலகு கட்டடம் மற்றும் ரூ. 22. 75 இலட்சம் மதிப்பீட்டில் இரட்டை வகை செவிலியர் குடியிருப்பு கட்டடம் ஆகியவற்றை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்து. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி, கூடுதல் இயக்குநர் மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை மரு. கிருஷ்ணா, இணை இயக்குநர், (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மரு. என். என். இராஜசேகரன், மேட்டுப்பாளையம் நகராட்சி நகர்மன்ற தலைவர், திருமதி. மெஹரி பாபர்வீன் அசரப் அலி. காரமடை நகராட்சி நகர்மன்ற தலைவர், திருமதி. உஷா வெங்கடேஷ். மேட்டுப்பாளையம் நகராட்சி துணைத் தலைவர் அருள்வடிவு முனுசாமி. நகர்மன்ற உறுப்பினர்கள் இரா. ஸ்ரீராம், கே. ரவி, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.