தி ஆக்ஸியோஸ் என்ற செய்தி நிறுவனம் இஸ்ரேல் உளவுத்துறை ஹிஸ்புல்லாவுக்கு வாக்கி டாக்கிகள் வழங்கப்படுவதற்கு முன்பாக, ஆயிரக்கணக்கான வாக்கி டாக்கிகளில் வெடி மருந்துகளை பொருத்தியதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. பேஜர்களுக்குள் சிறிய அளவிலான வெடி பொருட்களை இஸ்ரேல் மறைத்து வைத்ததாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என லெபனான் எச்சரித்துள்ளது.