அமெரிக்காவைச் சேர்ந்தவர் தாமஸ் என்ஸ்கோ. லாட்டரி விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் கடந்த 20 ஆண்டுகளாக ஒரே மாதிரி எண்களின் தொகுப்புகளை கொண்ட லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்திருக்கிறார். குறித்த எண்கள் அவரின் பிறந்தநாளுடன் தொடர்புடையது என கூறப்படுகிறது. இத்தனை ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகள் வாங்கிய தாமஸுக்கு இறுதியாக தற்போது அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அதன்படி ரூ.8 கோடி பரிசு விழுந்துள்ளது.