கோவை குனியமுத்தூர் போலீசார் நேற்று(செப்.29) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கோவைப்புதூர் அறிவொளி நகர் பகுதியில் சந்தேகம்படும்படி நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். சோதனை செய்ததில், அவர்கள் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்ற கே. கே. நகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பாசில் (21), மற்றும் கோவையில் வெவ்வேறு தனியார் கல்லூரிகளில் படிக்கும் 2 மாணவர்கள் என மொத்தம் 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 110 கிராம் கஞ்சா மற்றும் ஒரு எடை மெஷின் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், எல்ஜி தோட்டம் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே கஞ்சா விற்பனை செய்த கெம்பட்டி காலனியை சேர்ந்த பாலாஜி (29) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 110 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.