மர்ம நபரின் கைவரிசை

1087பார்த்தது
மர்ம நபரின் கைவரிசை
கோவை சின்னவேடம்பட்டி முருகன் நகரை சேர்ந்தவர் 63 வயதான ராஜேந்திரன். இவர் தபால் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் காலையில், அவரது வீட்டு கதவு உடைக்கப்பட்டிருந்தது.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் ராஜேந்திரனை ஃபோனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். உடனே ராஜேந்திரன் ஈரோட்டில் இருந்து கோவை திரும்பி வீட்டுக்கு சென்றார்.

அப்போது வீட்டு பீரோவில் இருந்த 4 1/4 பவுன் தங்க நகை திருட்டு போனது. நள்ளிரவில் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர் திருடி சென்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன் இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி