கோவை: விமான பயணம் தற்போது எளிதாகிவிட்டது -மயில்சாமி!

63பார்த்தது
கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த, முன்னாள் இயக்குனர்
மயில்சாமி அண்ணாதுரை பேசும்போது, முதலில் விமான பயணமே சவாலாக இருந்தது, அதன் பின் எளிதாகி விட்டது எனவும், விமான பயணம் போல் விண்வெளி பயணம் இப்போது எளிதாகி விட்டது எனவும் தெரிவித்தார்.
விண்வெளிக்கு பலவகைகளில் செல்ல முடியும், அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது என தெரிவித்த அவர்,
72 வயது பெண்மணி அங்குபோய் விட்டு மீண்டும் போக போகின்றேன் என சொல்லும் அளவிற்கு விண்வெளி பயணம் எளிதாக இருக்கின்றது எனவும், ஆனால் இந்த பயணங்கள் ஒரு வருடம் முன்பாக திட்டமிட வேண்டும் எனவும் தெரிவித்தார். அங்கு 7 முதல் எட்டு பேர் பணியில் இருப்பார்கள், ஆட்கள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருப்பார்கள் எனவும் தெரிவித்தார். சுனிதா வில்லியம்ஸ் போயிங் கலனில் சென்ற நிலையில் அது பழுதானதால் வேறு கலன் உடனே அனுப்ப முடியவில்லை என தெரிவித்த அவர்,
இந்த பயணங்கள் மிக மிக சகஜமாகவை எனவும் தெரிவித்தார். சுனிதா வில்லியம் இதைவிட அதிக நாட்கள் விண்வெளியில் இருந்திருக்கிறார்,
விண்வெளியில் அதிக மரத்தான் ஓடியவர் என்ற பயிற்சியும் அவருக்கு உண்டு என தெரிவித்தார்.
இங்கு திரும்புவதற்கு முன்பு வரை சர்வதேச விண்வெளி மைய கமாண்டராக இருந்துள்ளார் எனவும், அவருக்கு
உடல்நலன் , மனநலன் ஆகியவை சிறப்பாக இருக்கிறது எனவும், அது இருப்பதால்தான் கமாண்டராக இருந்து வழிநடத்தி இருக்கிறார் எனவும் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி