சிலிண்டரில் A26, B25, C30, D32 என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். A ஜனவரி, பிப்ரவரி, மார்ச், B ஏப்ரல், மே, ஜூன், C ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், D அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகியவற்றைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக ஒரு சிலிண்டரில் A26 என்று குறிப்பிட்டு இருந்தால், அந்த சிலிண்டர் மார்ச் 2026க்குள் காலாவதியாகிவிடும். சிலிண்டரில் D32 என்று குறிப்பிட்டு இருந்தால், அதனை டிசம்பர் 2032 வரை பயன்படுத்தி கொள்ளலாம். ஒரு சிலிண்டர் காலாவதியாக 15 ஆண்டுகள் ஆகும்.