முழு நேர முனைவர் பட்டப்படிப்பு (Ph.D) பயிலும் மாணவர்கள் 2024-25 கல்வி ஆண்டிற்கு கல்வி ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.1,00,000 வழங்கப்படும். விண்ணப்பத்தாரர்களின் வருமான வரம்பு ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். முதுகலைப் பட்டபப்டிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31