கோவை பீளமேடு அருகே வீரியம்பாளையம் காந்தி வீதியை சேர்ந்தவர் சிவராஜ் (29). தொழிலதிபரான அவர் சம்பவத்தன்று சின்னியம் பாளையம் அருகே நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் திடீரென சிவராஜிடம் கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாயை பறித்துவிட்டு தப்பிச் செல்லும்போது, அவர் போதையில் தவறி விழுந்தார்.
உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மடக்கி பிடித்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜான் போஸ்கோ (43) என்பதும் அவர் பார் ஒன்றில் மேலாளராக பணியாற்றுவதும் தெரிய வந்தது. உடனே அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.