பொள்ளாச்சி: சரக்கு ஆட்டோ விபத்து!

61பார்த்தது
பொள்ளாச்சி-உடுமலை சாலையில் இன்று காலை சரக்கு ஆட்டோ ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் படுகாயமடைந்தார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பூர் மாவட்டம், உடுமலையைச் சேர்ந்த சக்திவேல்குமார் (39) ஓட்டி வந்த ஆட்டோ, பொள்ளாச்சி அருகே டீச்சர் காலனி பகுதியில் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சக்திவேல்குமார், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்தின் சிசிடிவி காட்சியில், ஆட்டோ அதிவேகமாக வந்து கவிழ்ந்தது தெளிவாக பதிவாகி உள்ளது. இது தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி