கோவையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (டிச. 07) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாகி தான் வந்துள்ளார். அவரை பிறப்பால் பதவிக்கு வந்தவர் என எப்படி குறை சொல்ல முடியும்? ஒருவர் தேர்தலில் நிற்காமல் நேரடியாக முதல்வராக பொறுப்பேற்றார் என்றால் அதை தவறு என சொல்லலாம். வாரிசுகள் அரசியலுக்கு வருவது ஒன்றும் தப்பு கிடையாது” என்றார்.