குடிமைப் பொருள் குற்றத் தடுப்பு டி.ஜி.பி. ஆக சீமா அகர்வாலை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக உள்ள சீமா அகர்வால், குடிமைப் பொருள் குற்றத் தடுப்பு டி.ஜி.பி. ஆக பணியிட மாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "டி.ஜி.பி. சீமா அகர்வால், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு டி.ஜி.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.