'எனக்கு ஓட்டுபோடாதவரின் குழந்தைகள் 2 நாள் சாப்பிடக்கூடாது'

571பார்த்தது
மஹாராஷ்டிராவில் பாஜக கூட்டணியில் உள்ள ஷிண்டே தரப்பு எம்எல்ஏ சந்தோஷ் பங்கார், அடுத்த தேர்தலில் உங்கள் பெற்றோர் எனக்கு வாக்களிக்கவில்லை எனில் 2 நாள்களுக்குச் சாப்பிடாதீர்கள் என்று 10 வயதுக்கு குறைவான குழந்தைகளின் பள்ளியில் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.மேலும், பெற்றோர் ஏன் சாப்பிடவில்லை எனக் கேட்டால் சந்தோஷ் பங்காருக்கு வாக்களியுங்கள், அப்போதுதான் சாப்பிடுவோம் எனச் சொல்லுமாறு அவர் குழந்தைகளை மிரட்டி அதனை திருப்பி ஒப்பிக்கவும் வைத்துள்ளார். சமீபத்தில் மோடி மீண்டும் பிரதமர் ஆகாவிட்டால் தான் தூக்கிட்டு கொள்வேன் என்றும் அவர் பேசியிருந்தார்.

தொடர்புடைய செய்தி