உ.பி., மாநிலம் ஆக்ராவில் உள்ள வணிக வளாகத்தின் பார்க்கிங்-ல் பெற்றோரின் அலட்சியத்தால் காரில் சிக்கி ஒன்றரை வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. வாங்கிய பொருட்களை சரிபார்த்துக் கொண்டிருந்த பெற்றோர் குழந்தையை கவனிக்காமல் இருந்துள்ளனர். அப்போது அங்கும் இங்கும் ஓடி விளையாடிக்கொண்டிருந்த குழந்தை காரின் முன் சென்றுள்ளது. ஓட்டுநரும் இதை கவனிக்காமல் காரை குழந்தை மீது ஏற்றியுள்ளார். பதைபதைக்க வைக்கும் சிசிடிவி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.