வில்லிவாக்கம் - Villivakkam

வேலை வாங்கி தருவதாக மோசடி: வாலிபர் கைது

வேலை வாங்கி தருவதாக மோசடி: வாலிபர் கைது

அமைந்தகரை, பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ். பட்டதாரி. இவர், கடந்த மார்ச் மாதம் அமைந்தகரை போலீசில் அளித்த புகார்: ரமேஷ் என்பவர் முகநுால் சமூக வலைதளம் வாயிலாக எனக்கு அறிமுகமாகி, பல மாதங்களாக நட்பு ரீதியாக பழகி வந்தார். அவர், ரயில்வேயில் பணிபுரிவதாகவும், எனக்கும் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். அதற்காக, என்னிடம் பல தவணையில் 3 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றார். பின், பல மாதங்களாக, வேலை குறித்து எந்த தகவலும் அளிக்காமல் பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும். போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவாக இருந்த ரமேஷை நான்கு மாதங்களாக தேடி வந்தனர். மொபைல் போன் சிக்னல் அடிப்படையில், ரமேஷ் பெரம்பலுாரில் இருப்பது தெரிந்தது. அங்குள்ள பழைய பேருந்து நிலையத்தில் இருந்த, ரமேஷை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் போரூரை சேர்ந்த ரமேஷ்(39) என்பதும், வேலை இல்லாமல் இருப்பதும் தெரிந்தது. ஆகாஷிடம் பணத்தை பெற்று ஏமாற்றியதை ஒப்புக் கொண்டார். அவரை அமைந்தகரை போலீசார் நேற்று முன்தினம்(செப்.10) இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வீடியோஸ்


சென்னை
Sep 12, 2024, 14:09 IST/சைதாபேட்டை
சைதாபேட்டை

கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தக் கூடாது:  அமைச்சர் பொன்முடி

Sep 12, 2024, 14:09 IST
மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை என்பதற்காக மத்திய அரசு கல்வி நிதியை நிறுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அமைச்சர் பொன்முடி இன்று(செப்.12) கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 2021-22 முதல் 2024-25-ம் நிதியாண்டு வரை உயர்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் உள்ள மாநில உயர்கல்வி மன்றத்தில் இன்று நடைபெற்றது. இதற்கு உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி தலைமை தாங்கினார். இதில் உயர் கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ், தொழில்நுட்ப கல்வி துறை ஆணையர் டி. ஆபிரகாம் மற்றும் பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள் உட்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் 1967ம் ஆண்டு முதல் இருமொழி கொள்கை மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. சென்னை மாநில கல்லூரியில் இந்தி மொழி பாடத்தில் 3 பேர் தான் படிக்கிறார்கள். மலையாளத்தில் 4 பேர் படிக்கிறார்கள். உருது படிப்பில் யாருமே சேரவில்லை. தமிழக மாணவர்கள் இருமொழி கொள்கையை தான் விரும்புகிறார்கள். மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை என்பதற்காக மத்திய அரசு நிதியை நிறுத்துவது ஏற்க முடியாதது. தமிழகம் பள்ளிக்கல்வியில் இருந்து உயர் கல்வி வரை தலைசிறந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது. எனவே, மத்திய அரசு கல்விக்கான நிதியை நிறுத்தாமல் வழங்கி தமிழகத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.