வில்லிவாக்கம் - Villivakkam

மருத்துவ கல்லூரிகளில் அதிக கட்டணம்: பெற்றோர் குற்றச்சாட்டு

மருத்துவ கல்லூரிகளில் அதிக கட்டணம்: பெற்றோர் குற்றச்சாட்டு

சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், எம். பி. பி. எஸ். , படிப்பில் சேரும் மாணவர்களிடம், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, 6 லட்சம் ரூபாய் வரை கூடுதலாக வசூலிப்பதாக, பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில், 22 சுயநிதி மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இதில், சிறுபான்மையினர் கல்லுாரிகளில், 50 சதவீதம்; மற்ற கல்லுாரிகளில், 65 சதவீத இடங்கள் அரசு ஒதுக்கீட்டிற்கு தரப்படுகின்றன. சிறுபான்மை கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 35 சதவீதம்; மற்ற கல்லுாரிகளில், 20 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள இடங்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான, என். ஆர். ஐ. , ஒதுக்கீட்டிற்கு செல்கிறது. அரசு ஒதுக்கீடு இடத்திற்கு, 4. 50 லட்சம்; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 13. 50 லட்சம் ரூபாய் என, அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளது. நடப்பு கல்வியாண்டில், முதற்கட்ட மாணவர் சேர்க்கை முடிந்துள்ளது. இந்நிலையில், சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, கூடுதலாக 6 லட்சம் ரூபாய் வரை, கல்வி நிறுவனங்கள் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

வீடியோஸ்


சென்னை