வில்லிவாக்கம் - Villivakkam

16 மின்சார ரயில்களில் சேவை மாற்றம்

16 மின்சார ரயில்களில் சேவை மாற்றம்

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கத்தில், அரக்கோணம் யார்டில் பொறியியல் பணி காரணமாக, 16 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன் விவரம்: சென்னை சென்ட்ரல் - அரக்கோணத்துக்கு ஆக. 30, 31 ஆகிய தேதிகளில் காலை 8. 20, 9. 10, 11 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், திருவள்ளூர் - அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன. சென்னை சென்ட்ரல் - திருத்தணிக்கு ஆக. 30, 31 ஆகிய தேதிகளில் காலை 10, முற்பகல் 11. 45 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், திருவள்ளூர் - திருத்தணி இடையே பகுதி ரத்துசெய்யப்பட உள்ளன. திருத்தணி - சென்னை சென்ட்ரலுக்கு ஆக. 30-ம் தேதி காலை 10. 15 மணிக்கும், ஆக. 30, 31, செப். 1 ஆகிய தேதிகளில் நண்பகல் 12. 35 மணிக்கும் புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள், திருத்தணி - திருவள்ளூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன. அரக்கோணம் - சென்னை சென்ட்ரலுக்கு ஆக. 30, 31, செப். 1 ஆகிய தேதிகளில் முற்பகல் 11. 15, நண்பகல் 12, மதியம் 1. 50 ஆகிய நேரங்களில் புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள், அரக்கோணம் - திருவள்ளூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன. திருத்தணி - சென்னை சென்ட்ரலுக்கு ஆக. 31, செப். 1 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2. 20 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், திருத்தணி - திருவள்ளூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

வீடியோஸ்


சென்னை
ஆகாய தாமரைகளை அகற்ற புதிய இயந்திரம் அறிமுகம்
Aug 30, 2024, 06:08 IST/கொளத்தூர்
கொளத்தூர்

ஆகாய தாமரைகளை அகற்ற புதிய இயந்திரம் அறிமுகம்

Aug 30, 2024, 06:08 IST
சென்னையில் உள்ள கால்வாய்களில் ஆகாய தாமரைகளை அகற்றுவதற்கு நீரிலும், நிலத்திலும் இயங்கக்கூடிய நவீன இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது, என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 3. 5 மீ. அகலத்திற்கு அதிகமாக உள்ள கால்வாய்களில் ஆகாய தாமரைகள், மிதக்கும் கழிவுகள் மற்றும் சகதிகளை அகற்றிடும் வகையில், நீரிலும், நிலத்திலும் இயங்கக்கூடிய தன்மை வாய்ந்த ட்ரெயின் மாஸ்டர் எனப்படும் இயந்திரம் வாடகை அடிப்படையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த உபகரணம் 3. 5 மீட்டருக்கு மேல் அகலம் கொண்ட கால்வாய்களில் 4. 4 மீட்டர் வரை ஆழமாக தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளும். தற்போது இந்த இயந்திரம் 3 கி. மீ. நீளம் கொண்ட கேப்டன் காட்டன் கால்வாயில் ஆகாயத்தாமரைகள் மற்றும் மிதக்கும் கழிவுகளை அகற்றி, வண்டல்கள் தூர்வாரும் பணியினை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.