வில்லிவாக்கம் - Villivakkam

போக்குவரத்து நெரிசல்: மாநகராட்சி அதிரடி

போக்குவரத்து நெரிசல்: மாநகராட்சி அதிரடி

சென்னையில் அதிகரித்து வரும் நெரிசலுக்கு தீர்வாக, 493 இடங்களில் சாலையோர தள்ளுவண்டி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டு, மாநகராட்சி சார்பில் அறிவிப்பு பலகை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னையில் நாளுக்குநாள் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பகல் நேரம் போலவே இரவு நேரங்களிலும் அதிக இடங்களில் பணிகள் நடைபெறுவதால் மக்கள் எப்போதும் சாலையில் நடமாடுவதை பார்க்க முடிகிறது. இதேபோல் இரவு முழுவதும் பல உணவகங்கள் திறந்துள்ளதால் சில இடங்களில் இரவு நேரங்களில் கூட போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக தி. நகர், பாரிமுனை, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், அடையாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு நேரங்களிலும் போக்குவரத்து எரிச்சல் ஏற்படுவதையும், சாலையோர கடைகள் முன்பு இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு பொதுமக்கள் உணவு அருந்தச் செல்வதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாவதையும் பார்க்க முடிகிறது. வருங்காலத்தில் இந்த பிரச்சனை இன்னும் அதிகரிக்கும் என்ற காரணத்தினால் சென்னை மாநகராட்சி இதற்கு பல்வேறு வழிகளில் தீர்வு கண்டு வருகிறது. அதாவது விற்பனை மண்டலங்கள் மற்றும் விற்பனை செய்யக்கூடாத மண்டலங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

வீடியோஸ்


சென்னை
நவாஸ்கனி வெற்றிக்கு எதிரான வழக்கு: தேர்தல் ஆணையத்திற்கு ஆணை
Sep 19, 2024, 00:09 IST/துறைமுகம்
துறைமுகம்

நவாஸ்கனி வெற்றிக்கு எதிரான வழக்கு: தேர்தல் ஆணையத்திற்கு ஆணை

Sep 19, 2024, 00:09 IST
ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ்கனி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்த தேர்தல் வழக்கி்ல் நவாஸ்கனி எம்பி மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளரான நவாஸ்கனி, தன்னை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் முதல்வரான ஓ. பன்னீர்செல்வத்தை விட ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 782 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அதையடுத்து நவாஸ்கனி பல்வேறு முறைகேடுகளை செய்து வெற்றி பெற்றுள்ளதாகவும், வேட்புமனுவில் பல உண்மைகளை மறைத்துள்ளதாகவும், எனவே நவாஸ்கனி வெற்றி பெற்றது செல்லாது என அறிவி்க்கக்கோரி ஓ. பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சி. வி. கார்த்திகேயன் முன்பாக நேற்று(செப்.18) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் பதிலளிக்கும்படி ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியோருக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் நவ. 5-க்கு தள்ளி வைத்துள்ளார்.