தமிழ்நாடு மின்வாரியத்தின் அனல்மின் நிலையங்களில் மின்னுற்பத்தித் திறன் 5, 120 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு மின்வாரியத்துக்கு 4, 320 மெகாவாட் திறனில் 5 அனல்மின் நிலையங்கள் உள்ளன. திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் ரூ. 10, 158 கோடி செலவில் 800 மெகாவாட் திறனில் வடசென்னை-3 அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இது, மற்ற மின்நிலையங்களை விட அதிக திறன் உடையது. இங்கு கடந்த மாதம் 7-ம் தேதி முதல் மின்னுற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மின்வாரிய அனல்மின் நிலையங்களின் ஒட்டுமொத்த மின்னுற்பத்தித் திறன் 5, 120 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.