சென்னை: கர்நாடகா அரசை கண்டித்து தமாகா சார்பில் 10ம் தேதி
ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி. கே வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு காவரியில் இருந்து தண்ணீர் திறக்க கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால் குறுவை மற்றும் சம்பா பயிர்கள் கருகி வருகிறது. இந்நிலையில் தண்ணீர் திறந்து விட மறுப்பு தெரிவித்து வரும் கர்நாடகா அரசை கண்டித்து தமாகா சார்பில் வரும் 10ஆம் தேதி
ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஜி. கே வாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்து 10ஆம் தேதி டெல்டா மாவட்டங்களின் சார்பாக அரியலூர் மாவட்டம் திருமானூரில்
ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் விவசாய பெருங்குடி மக்களும், நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.