துருக்கி: ஹோட்டலில் தீ விபத்து.. 10 பேர் பலி

72பார்த்தது
துருக்கி: ஹோட்டலில் தீ விபத்து.. 10 பேர் பலி
துருக்கியின் வடமேற்கு பகுதியில் உள்ள பிரபல கர்தல்காயா ஸ்கை ரிசார்ட்டில் உள்ள ஹோட்டலில் 234 விருந்தினர்கள் தங்கியிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை அந்த ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 32 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். விபத்து குறித்த காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி