வேலைக்கு வர மறுத்த தொழிலாளர்கள் மீது கொடூரத் தாக்குதல் (வீடியோ)

57பார்த்தது
கர்நாடகா: விஜயபுரா மாவட்டத்தில் செங்கல் சூளை தொழிலாளர்கள் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இட்டாங்கி பட்டி என்ற கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் வேலைக்கு வர 3 தொழிலாளர்கள் மறுத்துள்ளனர். இதையடுத்து, செங்கல் சூளை உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் சதாசிவ மதார், சதாசிவ பபாலடி மற்றும் உமேஷ் மதார் ஆகிய 3 தொழிலாளர்களை உருட்டுக் கட்டையால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி