விநாயகர் சதுர்த்தியையொட்டி, வரும் 7ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செப். 7 பொதுவிடுமுறை, செப். 8 ஞாயிறு விடுமுறை வருவதால், பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர் செல்வதற்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என TNSTC அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து மதுரை, கோவை, சேலம், ஈரோடு, நெல்லை உள்ளிட்ட ஊர்களுக்கும், முக்கிய நகரங்களில் இருந்தும் நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதை தொடர்ந்து அதிகளவில் பயணிகள் வருவார்கள் என்பதால் போதிய வசதிகள் செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.