சமூக நல்லிணக்கத்தோடு விடுதலையை கொண்டாடி மகிழ்வோம்! - விஜய்

64பார்த்தது
நாடு முழுவதும் 78-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

“சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளைக் கடந்து, சமூக நல்லிணக்கத்தோடும் வேற்றுமையில் ஒற்றுமையோடும், நம் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட வீரர்களையும் தியாகிகளையும் நினைவுகூர்ந்து எந்நாளும் போற்றுவோம். எண்ணற்ற உயிர்களைத் தியாகம் செய்து போராடிப் பெற்ற இந்த விடுதலையைக் கொண்டாடி மகிழ்வோம். நாட்டின் வளர்ச்சிக்காக என்றென்றும் பாடுபடுவோம். அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் என சமூக வலைதளத்தில் விஜய் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி