விஜயகாந்திற்கு பொது இடத்தில் அரசு செலவில் மணிமண்டபம் அமைக்க ர் டி. டி. வி. தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
விஜயகாந்த் மறைவையொட்டி சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கும் தேமுதிக துணை பொதுச் செயலாளர் சுதீஷ் வீட்டில்
விஜயகாந்த் படத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டி. டி. வி. தினகரன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் பிரேமலதா மற்றும் அவரது மகன்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டி:
விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டு என்னால் அன்றைக்கு வரமுடியாத சூழ்நிலையில் இருந்தேன். விஜயகாந்திற்கு பொது இடத்தில் அரசு செலவில் மணிமண்டபம் அமைக்க பிரேமலதா கோரிக்கை வைத்துள்ளார் அதை நானும் வலியுறுத்துகிறேன்.