காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு செல்வப்பெருந்தகை அறிவுரை

60பார்த்தது
காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு செல்வப்பெருந்தகை அறிவுரை
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் சிறப்புகளை எடுத்து கூறுகிற வகையில் ஒரு வார காலத்திற்கு தெருமுனை கூட்டங்களை நடத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய விடுதலை போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி விடுதலை, மத நல்லிணக்கம், தீண்டாமை ஒழிப்பு, நிர்மாணத் திட்டங்கள் என அனைத்து நிலைகளிலும் சமூக ஒற்றுமையை நோக்கமாகக் கொண்டு அகிம்சை வழியில் போராட்டங்களை நடத்தினார்.

ராகுல் காந்தி இரண்டு நடைப் பயணங்கள் மூலமாக 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடந்து தம்மை வருத்திக்கொண்டு நாட்டு மக்களின் ஒற்றுமைக்காக பாடுபட்டதை நினைவு கூறுகிற வகையில் இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாவது ஆண்டு நிறைவு நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தங்களது யாத்திரையின் மூலம் சமூகத்தை ஒன்றிணைப்பதில் வெற்றி பெற்றதை மகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்து செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த செய்தியை தமிழ்நாடு காங்கிரஸ் நண்பர்கள் அனைவரும் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் சிறப்புகளை எடுத்து கூறுகிற வகையில் ஒரு வார காலத்திற்கு மாவட்ட, வட்டார, நகர, பேரூர், கிராம அளவில் தெருமுனை கூட்டங்களை நடத்தி பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி