நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) டிஜிட்டல் பேமெண்ட் வசதியை மேம்படுத்தும் நோக்கில் "UPI சர்க்கிள்" என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சம் மூலம் பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்கை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து UPI வசதியை பயன்படுத்திக்கொள்ள முடியும். இதற்கு முதன்மை பயனர்கள் மற்றவர்களுக்கு அங்கீகாரத்தை வழங்க வேண்டும். ஒரு முதன்மைப் பயனர் 5 இரண்டாம் நிலைப் பயனர்களைச் சேர்க்க முடியும்.