பாஜகவில் இருந்து பலரும் அதிமுகவில் சேர்ந்து வருகின்றனர் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு செல்வது அவரவர் உரிமை. அதை யாரும் தடுக்க முடியாது, இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அது அவரவர் மனநிலையை பொறுத்து உள்ளது. தேர்தல் தேதி அறிவித்த பிறகுதான் கூட்டணி முழுமை பெறும்" என்றார்.