சென்னை: சீமான் வீட்டு காவலர்களுக்கு ஜாமீன்

68பார்த்தது
சென்னை: சீமான் வீட்டு காவலர்களுக்கு ஜாமீன்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான பாலியல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக, போலீசார் அவரது வீட்டில் சம்மன் ஒட்டினர். இதனை சீமானின் பாதுகாவலர் சுபாகர், பணியாளர் அமல்ராஜ் ஆகியோர் கிழித்தனர். இதனையடுத்து அவர்களை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இந்தநிலையில், அவர்கள் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதன்படி இருவரும் மறு உத்தரவு வரும் வரை பூக்கடை காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி