மாநில திட்டக் குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்ட "தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25"-யை (Economic Survey of Tamil Nadu 2024-25) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்வில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, திட்டக்குழு செயல் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், தலைமை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொருளாதார ஆய்வறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிடுவது இதுவே முதல்முறையாகும்.