சென்னை திருமங்கலத்தில் மருத்துவர் தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், மயக்க ஊசி செலுத்தி இரண்டு மகன்களையும் கொலை செய்து பாலமுருகன் தூக்கிலிட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இரண்டு மகன்களும் தற்கொலைக்கு ஒத்துழைக்காததால் மருத்துவரே கொன்றிருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. மகன்களை கொன்ற பிறகு மருத்துவர் தனது மனைவியுடன் தற்கொலை செய்து இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.