தமிழகத்தில் யாருடைய வாலும் ஆடாது - பிரகாஷ் ராஜ் கருத்து

62பார்த்தது
சாதி அரசியல் குறித்து நீங்கள் அதிகம் பேசுகிறீர்கள் என்று அண்மையில் என்னிடம் கேட்டார்கள். ‘கருணாநிதி இருந்திருந்தால் நான் பேச வேண்டிய அவசியம் இருக்காதே’ என்று நான் சொன்னேன். அவர் இருக்கின்ற வரைக்கும் யாராலும் இங்கே வாலாட்ட முடியாது என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் கருணாநிதியின் வரலாற்று புகைப்பட கண்காட்சியை சென்னை பாரிமுனையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது ஓர் அற்புதமான ஆவணத் தொகுப்பு. கடந்த கால நியாபகங்கள் எனக்குள் வந்து செல்கின்றன.

‘இருவர்’ படத்தில் நடித்து 28 வருடங்கள் கடந்துவிட்டன. 30 ஆண்டுகளுக்கு முன் நான் தமிழகத்து வரும்போது இருந்த கருணாநிதி நினைவுக்கு வருகிறார். கருணாநிதி குறித்த அற்புதமான ஓர் ஆவணப் பதிவு இது. இன்றைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கருணாநிதியுடனேயே இருப்பது போன்ற உணர்வை கொடுக்கும் ஓர் அற்புதமான பதிவு.

ஜூன் 4-ம் தேதிக்கான தமிழகத்தின் முடிவு தெரிந்துவிட்டது. இங்கே யாருடைய வாலும் ஆடாது. மத்தியில் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று நம்புகிறேன். அப்படித்தான் தெரிகிறது. ஏனென்றால் அரசியலில் எதிர்கட்சி ஜெயிக்காது; ஆளும் கட்சி தான் தோற்று போகும். தோற்றுப்போவதற்கான அனைத்து வேலைகளையும் அவர் செய்துவிட்டார் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி