வடசென்னைக்குட்பட்ட பகுதிகளில் தலைமை செயலாளர் ஆய்வு

66பார்த்தது
வடசென்னைக்குட்பட்ட பகுதிகளில் தலைமை செயலாளர் ஆய்வு
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, வடசென்னைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நீர்நிலை புனரமைப்புப் பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இன்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ. ஆ. ப. , வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, வடசென்னைக்குட்பட்ட பகுதிகளில் நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகிய துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நீர்நிலை புனரமைப்புப் பணிகள் குறித்து குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் இராயபுரம் மண்டலம், வார்டு-61, பூந்தமல்லி பிரதான சாலை, காந்தி இர்வின் பாலம் இரயில்வே பாதையின் அருகில் ரூ. 5. 20 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அணுகு கால்வாய் மற்றும் நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியினைப் பார்வையிட்டு, பணிகளை விரைவாக மேற்கொண்டு செப்டம்பர் மாத இறுதிக்குள் விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளியினைப் பார்வையிட்டு, மாணவர்கள் சேர்க்கை மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்து தலைமையாசிரியருக்கு அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி