2000 முதல் 2019ம் ஆண்டுகளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46% அதிகரித்துள்ளது. 20 வருடங்களில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 13 சதவீதமும், வயிறு சம்பந்தப்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27% அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புற்றுநோய் எதனால் வருகிறது? அதற்கான சரியான காரணிகள் என்ன? என்பது மருத்துவர்களுக்கே புரியாத புதிராகத்தான் இருந்து வருகிறது.