பாரிஸ் ஒலிம்பிக்கில் உகாண்டா சார்பாக பங்கேற்ற ஓட்டப்பந்தய வீராங்கனை ரெபேக்கா மீது அவரது காதலர் தீ வைத்து எரித்ததில் வீராங்கனை பரிதாபமாக உயிரிழந்தார். 32 வயதாகும் ரெபேக்கா, டிக்சன் எண்டிமா என்பவரை காதலித்து வந்தார். நிலம் வாங்கியதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கடந்த 1ம் தேதி ரெபேக்கா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். 75% தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.