7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

65பார்த்தது
7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி