உடல் பருமன் ஒரு நோய் இல்லை என்றாலும், பல்வேறு வகையான நோய்களுக்கு காரணமாகி விடுவதால், அதை கட்டுப்படுத்துவது அவசியமாகிறது. அந்த வகையில், உடல் எடை குறைக்க தினமும் ஓட்ஸ் உணவுகள், முளை கட்டிய தானியங்கள், வாழைப்பழம், சர்க்கரைவள்ளி கிழங்கு, முட்டைகோஸ், வேர்க்கடலை ஆகியவை உடல் எடையை குறைக்கும் அற்புத உணவுகள். இவற்றை சாப்பிட்டால், நமது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்டது.