செபி புதிய தலைவராக துஹின் காந்தா பாண்டே தேர்வு

75பார்த்தது
செபி புதிய தலைவராக துஹின் காந்தா பாண்டே தேர்வு
இந்தியப் பங்குப் பரிவர்த்தனை அமைப்பின் (செபி) தலைவராக மாதபி பூரி புச் அந்தப் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது மத்திய அரசின் நிதித்துறை செயலராக இருந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி துஹின் காந்தா பாண்டே, செபி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், துஹின் காந்தா பாண்டே 11ஆவது செபி தலைவராக ஆகியுள்ளார். முன்னதாக ஒடிசா மாநில நிதிக் கழகத்தின் நிர்வாக இயக்குநராகவும், ஒடிசா சிறு தொழில் கழகத்தின் நிர்வாக இயக்குநராகவும் இருந்தார்.

தொடர்புடைய செய்தி